தமிழன் என்று சொல்லடா!! தலை நிமிர்ந்து நில்லடா!!

இந்த புரட்சியை தமிழ்ல வாழ்த்தினா தான் சிறப்பு!!

ஒரு அமைதிப்புரட்சி!! யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும் இல்லாம போராட்டம் நடத்துற ஒரு கண்ணியம்!! நீங்க என்ன சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்.. நடத்தி காட்டுங்க நம்புறோம்னு சொல்ற உறுதி!! அரசியல்வியாதிகளை அண்ட விடாமல் செய்த தன்னம்பிக்கை!!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரம்பித்து இப்போது அது வெளிநாட்டு பானங்களை எதிர்க்கவும் செய்கிறது!!

நானும் ரொம்ப நாளா பாத்துட்டு தான் இருக்கேன்! எப்பவுமே தமிழ்நாட்டுல எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், நாலு நாள் கழிச்சி தான் வடஇந்திய தொலைக்காட்சிகளுக்கு சொரணையே வருது. இதை பத்தி வேற ஒரு வலைப்பதிவுல பாக்கலாம்!! நீங்க ஒரு **உம் புடுங்க வேணாம்னு சொல்லி அவங்கள விரட்டி விட்டு இருந்தா செம்மையா இருந்து இருக்கும் !!

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!! தமிழன்னு சொல்லி பெருமைப்பட இன்னொரு காரணம் கொடுத்த எங்கள் மாணவர்களுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!

இதுக்கு ஆதரவு கொடுக்குற காவல் துறைக்கு நன்றி!!

தமிழன்டா!!!