முத்தமிழ் கேள்வி பட்டு இருக்கிறோம்!! இயல், இசை, நாடகம். இசை மற்றும் நாடகம் என்பது எளிதாக புறிந்து கொள்ளக்கூடியது!! பள்ளியில் படிக்கும் பொது “இயல்” என்றால் சாதாரண வாக்கியத்தில் எழுதப்பட்ட தமிழ் என்று கூறினார்கள். “இயல்” தமிழுக்கு ஏதேனும் உதாரணம் சொல்ல சொன்னால் எனக்கு அப்பொழுது தெரியாது. சில நாட்களுக்கு முன்பு படிப்பில் உள்ள துறைகளுக்கு ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து பார்க்கும் பொது தோன்றிய சில பிரிவுகள்!!! புவியியல, உயிரியல், வடிவியல், இயற்பியல், வேதியியல் என்ற பிரிவுகளை கேள்விப்படும் போது, “இயல்” என்பதன் பொருள் இன்னும் விளங்குறது!!!

ஆங்கிலத்தில் “logy” என்ற சொல்லிக்கொண்டு சில பிரிவுகள் முடிகின்றன!! அனால் அதன் பொருள் எனக்கு விளங்கவில்லை… அனால், “இயல்” என்று சில பிரிவுகள் முடிவதல் பொருள் புறிந்து இருக்கிறது!!! இதனை நாட்களுக்கு பின் கொஞ்சம் தமிழ் தெரிந்து கொண்டதில் ஒரு நிறைவு!!!