நீண்ட நாட்களுக்கு பின் ஒரு வலைப்பதிவு!!!  அதுவும் தமிழில்!! ஒரு திருப்தி!! தொலைகாட்சியில் நிகழ்ச்சி நிரல் பார்க்கும் போது உதித்தது இந்த எண்ணம்!!!

தமிழில் ஒரு தினத்தின் நேரத்தை காலை,மதியானம், சாயங்காலம், இரவு என்று சொல்லுகிறார்கள்.. இதில் காலை என்பதன் பொருள் எனக்கு தெரியவில்லை… தங்களுக்கு தெரிந்தால் சொல்லலாம்!! மற்றவைக்கு என் தமிழ் மூளை சொல்ல பொருள் 🙂

மதியானம் : மத்திய வானம்!! சூரியன் “மத்திய வானத்தில்” இருக்கும் நேரம்!!  காலப்போக்கில் திரிந்து மதியானம் என்று ஆகி இருக்கலாம்!!
சாயங்காலம் : சாயும் காலம்!! சூரியன் “சாயும் காலம்”!!!
இரவு : தமிழில் “இரவு” என்றல் கடன் வாங்கு என்று பொருள்.. (நிறைய பேருக்கு நினைவு இருக்கலாம்) நிலவு சூரியனிடத்தில் ஒளியை கடன் வாங்கி நமக்கு தருகிறது!! ஒரு வேளை இதையே தமிழர்கள் இரவு என சொல்லி இருக்கலாம் 🙂

ஏதோ எனக்கு தெரிந்த ஒரு சில வார்த்தைகள் இப்போது!!!. வேறு சில வார்த்தைகள் பின்னர் 🙂

இப்படி யோசிக்கும் போது எனக்கு தோன்றும் ஒரு எண்ணம் “வாழ்க தமிழ்!!”

நெஜம்மா!!!